Saturday, September 25, 2010

சிரிக்க ... சிந்திக்க‌ !!! (நாகூர் உம்மாவும், நாகம்மாவும்)

நாகூர் உம்மா :  ஆ.... நாகம்மா ,கையில் ஒரு செம்போட எங்க போறப் பயணம்?
கோயிலுக்கு போறன் நாகூர் உம்மா.


நாகம்மா :  அது சரி உங்க கையில என்னது தேங்காய் எண்ணெய் போத்தல் ?


நாகூர் உம்மா :  ஓ.... அதுவா நான் கூட நம்ம அவுலியா கபுரடிக்கு தான் போறன்.


நாகம்மா :   நான் கோயிலுக்கு பால் கொண்டு போற மாதிரி தான் நீங்களும் தர்காவுக்கு எண்ணெய் கொண்டு போறியல். என்றாலும் சொல்றேன்னு கோவிக்காதீங்க நாகூர் உம்மா ,நம்ம மதத்துல உள்ள மாதிரி உங்கல்ல எதுவுமே இல்ல தானே ?


நாகூர் உம்மா :  (இஸ்லாமிய உணர்வு (?) கொண்டவராக!) என்ன? உங்கள மாதிரி நம்ம கிட்ட இல்லையா? யார் சொன்னது? உங்களுடைய மத்தத்தில் உள்ளவற்றை எடுத்து விடுங்க பார்ப்போம். எது எங்களிடம் இல்லை என்று நானும் பார்த்து விடுகிறேன்.


நாகம்மா :  நாங்கள், நட்ட கல்லை சிலையாக வணங்குறோமே!
உங்களுடைய‌ மதத்தில் அப்படி இல்லையே ?


நாகூர் உம்மா :  ஏன்? நாங்கள்,படுக்கின்ற கல்லை கபுராக வைத்து வணங்குறோமே!!


நாகம்மா :  நாங்கள் தேர் இழுக்கிறோம். நீங்க என்னவாம் ?


நாகூர் உம்மா :  ஏன்? எங்கள் நாகூரில் சந்தனக் கூடு இழுக்குறார்களே!


நாகம்மா :  நாங்கள் சிலைகளுக்கு மாலை போட்டு பாலாபிசஷேகம் செய்றோமே!


நாகூர் உம்மா :  ஓ.... இவ்வளவு தானா? நாங்க‌ளும் கபுருக்கு புடவை போத்தி சந்தானாபிஷேகம் செய்கிறோமே!


நாகம்மா :  ஆ...ஆ... நம்ம கலாச்சாரத்துல வில்லுப்பாட்டு கதாகாலட்சேபம் என்று நடத்துவோமே..!


நாகூர் உம்மா :  நாங்க ராத்திபு நடத்துவோமே..!


நாகம்மா :  நாங்க திருநீரை நெற்றியில் பூசுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் சந்தனத்தை கலுத்தில் பூசுவோமே!


நாகம்மா :  நாங்கள் திருமணத்தில் தாலி கட்டுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் கட்டுகிறொமே!


நாகம்மா :  எங்கள் மதத்தில் பக்திப்பாடல் இருக்கே!


நாகூர் உம்மா :  ஏன்? எங்களுக்கு தான் இஸ்லாமிய கீதம் இருக்கே!


நாகம்மா :  நம்மிடம் தீட்சை உள்ளதே!


நாகூர் உம்மா :  நம்மிடமும் முரீது பை அத் உள்ளதே!


நாகம்மா :  நாங்கள் நல்ல நாள் , சகுனம்,ராகு காலம் , சோதிடம் பார்ப்போமே!


நாகூர் உம்மா :  இவ்வளவு தானா ? நாங்களும் தான் பால் கிதாபுல இதெல்லாம் பார்க்குறோமே!!


நாகம்மா :  நாங்கள் கழுத்துல தாயத்து கட்டுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் கழுத்துல துஆ போடுறோமே!


நாகம்மா :  நம்ம ஆட்கள் பெயர் சூட்டு விழா காதணி விழா பூப்புனித நீராட்டு விழா பிற‌ந்த நாள் விழா அஸ்திவாரம் நிலை போட விழா புது வீடு கிரகப் பிரவேஷம் எல்லாம் செய்வாங்களே!


நாகூர் உம்மா :  இப்போ நீங்க சொன்னதில் ஒன்று விடாம நாங்களும் தான் செய்றோமே!!


நாகம்மா :  அதுவும் அப்படியா.....ஆ .... நாங்க சாவு வீட்டுல திதி திவசம் என்று நடத்துவோம்.


நாகூர் உம்மா :  நாங்களும் கத்தம் ஓதி சாப்பாடு கொடுப்போம்.


நாகம்மா :  நாங்க துவஜாரோகனம் என்று கொடி ஏற்றுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் தீன் முஹியத்தீன் என்று கொடி ஏற்றுவோமே!


நாகம்மா :  நமக்கு மயில் இறகு புனிதமானதே!


நாகூர் உம்மா :  எங்க தர்காவுலயும் மயிலிறகு உள்ளதே!


நாகம்மா :  நாங்க கோயில்ல பல மெட்டுல பஜனை பாடுவோமே!


நாகூர் உம்மா :  நாங்களும் பல மெட்டுல மௌலீது ஓதுவோமே!


நாகம்மா :  நாங்க நம்ம தெய்வங்கள் போல வருஷா வருஷம் கோயில்ல      அன்ன தானம் கொடுப்போமே!


நாகூர் உம்மா :  நாங்களும் நம்ம அவுலியாக்கள் போல வருஷா வருஷம் கந்தூரி கொடுப்போமே!


நாகம்மா :  அப்பாடா இதுக்கு மேலன்னா என்னால அடுக்க முடியாது. நாமன்னா ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் தான். இப்படி நமக்குள்ள இவ்வளவு ஒற்றுமை இருக்கும் போது நமக்கென்ன கோயில், கபுரடி வேறுபாடு? இன்னக்கி நானும் உங்களோட தர்காவுக்கு வாரன். நாளைக்கி நீங்க‌ என்னோட கோயிலுக்கு வாங்க.... நாம தான் ஒரே மாதிரியானவங்களாச்சே. பிறகு ஏன் வேற்றுமை ?


நாகூர் உம்மா :  !!.........!!.........!!..........?..........??

பரம்பரை பழக்கமே மார்க்கம் என்று கண்மூடி நம்பிக்கையில் ஊறித்திளைக்கும் இஸ்லாமிய அன்பர்களே! உங்கள் பரம்பரை பழக்கங்கள் எங்கிருந்து செய்யப்பட்டவை என்பதை உணர்ந்திருப்பீர்கள். பின் வரும் நபி மொழியை சற்று சிந்திக்கவும்.

"எவன் ஒருவன் மாற்று மத கலாச்சாரத்தில் ஒன்றை தனதாக்குகிறானோ அவன் அந்த மதத்தை சார்ந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
(ஸஹீஹ் புஹாரி)

No comments:

Post a Comment