ஒரு பரீட்சைக்கு தயாராகும் போது அதற்காக எத்தனை எத்தனை முன் ஆயத்தங்கள் மேற்கொள்கிறோம்.சாதாரண பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க, பரீட்சையில் சித்தியடைய எவ்வளவு பெரிய முயற்சி செய்கிறோம்.
ஆனால் இந்த உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் நம்மை கேள்வி கேட்க இருக்கிறான்.அக் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயாராக உள்ளேனா? அல்லாஹ்வின் பரீட்சையில் நான் சித்தியடைவேனா?எங்களை நாங்களே ஒரு முறை கேட்டு பார்க்க வேண்டும் சகோதர சகோதரிகளே!
இதை தான் உமர் ரழி அவர்கள் "நீங்கள் விசாரிக்கப்படு முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் (முஹாஸபா செய்து) கொள்ளுங்கள். உங்களது செயற்பாடுகள் மறுமையில் நிறுக்கப்படுவதற்கு முன்னர் நீங்களாகவே எடை போட்டுப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒவ்வொருவரும் ஒருநாளில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எந்தளவு கட்டுப்பட்டு வாழ்ந்தோம், இன்னும் அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட அம்சங்களிலிருந்து எந்தளவு விலகி நடந்து கொண்டோம் என்பது பற்றித் தன்னைத் தானே வினவிக் கொள்வதே "முஹாஸபா" வாகும்.
நபியவர்கள் கூறினார்கள் "ஒரு காலம் வரும், அக்காலத்தில் நரகத்தின் வாயில்களிலிருந்து அழைக்கும் அழைப்பாளர்கள் தோன்றுவார்கள். அவர்களுக்கு சாதகமாக பதிலளிப்பவர்களை அவர்கள் நரகத்தினுள் எறிந்து விடுவார்கள்... "(புஹாரி).
இரவு படுக்கைக்கு சென்றதும், இன்று நான் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்கு வந்தது முதல் என்ன என்ன செய்தேன்? நன்மையான விடயங்கள் அதிகமாக செய்தேனா? அல்லது தீமையான விடயங்கள் அதிகமாக செய்தேனா? நன்மையான விடயங்கள் அதிகம் செய்திருந்தால் Alhamdhulillah நாளை Insha Allah இதை விட அதிகமான நன்மையான விடயங்கள் செய்வேன் என niyya வைக்க வேண்டும்.அவ்வாறின்றி தீமையான விடயங்கள் அதிகம் செய்திருந்தால், (May Allah Forgive All Our Sins) அல்லாஹ்விடம் தான் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டு மனமுருகி தெளபா செய்து இனி அத்தகைய பாவங்கள் செய்ய மாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதிப்பூண்டு பாவங்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து நடக்க முயற்சிப்போம்.
"தனது உள்ளத்தைக் கட்டுப் படுத்தி மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்க்கைக்காக உலகத்தில் செயல்பட்டவர் தான் புத்திசாலியாவர்"(திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)
No comments:
Post a Comment